Monday, December 24, 2012

சச்சின் டெண்டுல்கரின் கடிதம் ரசிகர்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு தவறேனும் இருந்தால் மன்னிக்கவும் :(




அன்பார்ந்த ரசிகர்களே .
   ஆழ்ந்த துயரத்துடன் இந்த மடலை அளிக்கிறேன். இங்கிலாந்துடன் அடைந்த தோல்வியால்  உங்களை நான்  ஏமாற்றிவிட்டேன். நீங்க என்னிடம் எதிர்பார்த்தது இதுவல்ல. நான் எப்போதும் என் முழு அற்பணிப்பை என் அணிக்கு அளித்துளேன். என் ஓய்வுக்கு நிர்பந்திக்க படுகிறேன் அவர்கள் கருத்தோடு என்னால் ஒத்து போகமுடியாது. ஆனால் நான் இத்தனை நாள் கடைபிடித்து வந்த தரத்திற்கான ஆட்டம் இப்போது என்னால் தர இயலாததால் என் ரசிகர்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையில் உள்ளேன்.
என் ஏமாற்றமான செயல்பாடு மற்றும் தொடர் தோல்விகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்  . ஆனால் நான் இன்னும் என் 16 வயதில் தொடங்கியதை  போலவே தான்  உள்ளேன். நான் என் அறிமுக காலத்தில் செய்ததை தொடர்ந்து தவறாமல் செய்து வருகிறேன். என்னிடம் எந்த மாற்றமும் இல்லை என் அர்பணிப்பு, என் பயிற்சி. ஆனால் என் வயது என்னை நெருக்குகிறது இதனுடன் கடந்த ஐந்து வருடமாக போராடி வருகிறேன்.ஆனால் நான் கடினமான பயிற்சி மூலம் என்னை தொடர்ந்து தயார்படுத்தி சிறந்ததை தர முயல்கிறேன்

 என் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் தான் என் உலகம் . நானும் வினோத் காம்ப்ளியும் ஹாரிஸ் ஷீல்ட் கோப்பையில் 600 ஓட்டங்கள் குவித்ததை இன்னும் மறக்கவில்லை இன்னும் சில நாட்கள் அந்த என்னங்கலோடே என் நாட்கள் கழியும் . அந்த நாளே நான் இனி என் காலம் வரை கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தேன், அந்த 14 வயதில் . என் வாழ்நாளில் உணவு, இனிப்பு , சைக்கிள்   வேறெதையும்   விட கிரிக்கெட்டையே  அதிகமாய் நேசித்தேன்
காலங்கள் கடந்து விட்டன நானும் முதிர்ச்சி  அடைந்து விட்டேன் விளையாட்டு வீரனாய் மனிதனாய் அனால் வேட்கை இன்னும் குறையவில்லை. இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே நினைக்கிறேன் களம் காணும் பொழுது எல்லாம் அதுவே என் வாழ்நாளின் மந்திரமாய் உள்ளது. என் வாழ்நாளில் பணம், புகழ் எல்லாம் அடைந்து விட்டேன். என் சாதனைகளை கண்டு பெருமிதம் கொள்கிறேன் ஆனால் உலக கோப்பை எட்டாக்கனியாகவே இருந்தது அதையும் கடைசியில் அடைந்து விட்டேன்
அனால் உலக கோப்பைக்கு பிறகு உண்மையான போராட்டம் தொடங்கியது அது இன்னும் தொடரும் சிறு சருக்கல் . என் ஆசை நிறைவேறிவிட்டது அதானால் நான் வெளியேறவேண்டும் எனவும் என் கனவுகள் நிறைவேறியதால் ஓய்வு பெற சிறந்த தருணம் இதுவே எனவும் கூறினார் . ஆனால் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த முடியும் என்று நம்பினேன் . இளைஞர்களை வழிநடத்த சில அனுபவசாலிகள் தேவை என்று நினைத்தோம்

 எங்கள் எண்ணம் எல்லாம் இளைஞர்களுக்கு சுமுகமான பாதையை உருவாக்கவேண்டும் என்பது தான் ஆனால் எங்கள் எங்கள் சரிவை நாங்கள் கவனிக்கவில்லை
இதுவே எல்லாவற்றுக்கும் ஆணிவேராய் அமைந்தது

ராகுல் லக்ஷ்மன் இருவரையும் ஆஸ்திரேலியா தொடருக்கு பின் இழந்தது கடினமாய் இருந்தது என் ஓய்வை பற்றி சிந்திக்கவும் தொடங்கினேன் . அனால் வங்க தேசத்துடனான சதத்தால் எனக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது ஆனால் அதிர்ஷ்டமின்மையால் தோல்வியே மிஞ்சியது, இரண்டு தொடர்களுக்கு பின்னால் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியால் மீண்டும் என் ஓய்வை பற்றி பேசத்தொடங்கினார். நான் சுயநலவாதி என்றும் சிறிய அணிகளை தேர்ந்து எடுத்து விளையாடுகிறேன் என்றும் கூற ஆரம்பித்தனர் ஆனால் அது உண்மை அல்ல. என் குழந்தைகளுடன் இந்த காலத்தில் நேரம் செலவிட வேண்டியுள்ளது அதாலா சில போட்டிகளுக்கு நடுவில் ஓய்வெடுத்து கொண்டேன்
நான் சுயநலவாதி என்று ஒத்துகொள்கிறேன் என் வாழ்வின் சிறப்பான பகுதிகள் கிரிக்கே உடனே கழிந்துள்ளது எனக்கு அதை தவிர வேறொன்றும் என்னை வெளிபடுத்தவில்லை.விழித்தவுடன் கிரிக்கெட் பேட் உடன் என் நாள் தொடங்கும் என் கிரிக்கெட் உபகரணங்களை அடுக்கி வைத்து என் நாள் முடியும். இதுவே 25 வருடங்களின் என் வாழ்க்கையை இருந்தது அவ்வளவு எளிதில் இதை விட முடியாது. ஓய்வு பெறுவது என் இறப்பிற்கு சமம் ஏனென்றால் கிரிக்கெட்காக வாழ்ந்து உள்ளேன். உண்மையை சொல்ல போனால் ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் கிரிக்கெட் வர்ணனையை அல்லது ஒரு நல்ல பயிற்சியாளராய் இருக்க முடியுமா தெரியவில்லை. எதுவும் என்னை கிரிக்கெட் விளையாட்டு  போல் திருப்தி படுத்தாது. நான் நேரியாய் பேர் ஓய்வடைவதை பார்த்துள்ளேன் ஆனால் இப்போது உணர்கிறேன் அவர்களின் உணர்வை

 இது நான் செல்ல வேண்டிய நேரம் என்று உணர்ந்துள்ளேன் நான் என்ன செய்ய  போகிறேன் என்று யோசிக்க சில காலம் தேவைப்படும் , நான் இங்கு சாதனைக்காகவோ இல்லை புகழுக்காகவோ இல்லை கிரிக்கெட்டின் மீதான என் காதலுக்காகவே என் கிரிக்கெட் வாழ்கை தொடங்கிய நாளில் இருந்து . என் ஓய்வை அறிவிக்க சிறிது காலம் தேவைப்படும் . ஒரு கிரிக்கெட் சேவகனாய் என் வேண்டுகோள் இது இதற்க்கு நீங்களும் சம்மதித்தால் சந்தோசமே
நன்றி
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

   





Sunday, October 28, 2012

மெனுவும் உணவும் :

 மிக நீண்ட நாள் கழித்து என் வலைப்பூவை உயிர்பித்துள்ளேன். அனைவரும் நலமா
     சில நாட்களாக நான் அதிகமாக பார்ப்பதும் என் மனதை பிசைவதும் உணவு பொருளை வீணாக்குவது பெரும் பலம் கொண்ட அரசாங்கம் முதல் நடுத்தர மக்கள் வரை இதற்க்கு விதிவிலக்கல்ல. ஆள்பவர்கள் அசட்டையாக இருந்துவிடலாம் அவர்களின் மூன்று வேலை உணவிற்கு என்றும் உத்திரவாதம் உண்டு, சிறைபட்டாலும் கூட. ஆனால் உழைத்து பிழைக்கும் ஒவ்வொருவரும் மிக பெரிய தொழில் நிறுவனத்தின் செயல் அதிகாரியாய் இருந்தாலும் கூட பசியும் வறுமையும் கடக்காமல் அந்த இடத்திற்கு சென்று இருக்க முடியாது என்ற நம்பிக்கையில்...
          ஒரு வருடத்தில் மட்டும் பல ஆயிரம் டன் உணவுகள் ஆடம்பர  நட்சத்திர உணவு விடுதியில் மட்டும் வீணாகின்றன அப்படி என்றால் தினசரி மற்ற இடங்களில் வீணாக்கப்படும் உணவுகளை கணக்கெடுத்தால் அது பல நூறாண்டுகளுக்கு மக்களின் பஞ்சத்தை போக்க வல்லதாய் இருக்கும்..
   பசி ருசி அறியாது என்பார்கள் உங்களுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்றால் குப்பையில் கொட்டாமல் தேவைபடுவோர்க்கு தரலாமே. குப்பையில் கொட்டினாலும் கொட்டுவோம் மற்றவர்களுக்கு தர மாட்டோம் என்ற என்னத்தை தவிருங்கள்.
எதோ என்னால் முடிந்த சில யோசைனைகள் :
* விசேஷங்களில் தேவையான அளவு உணவை கேட்டு பெற்று கொள்ளுங்கள்
* வேண்டும் என்று சொல்வதற்கு தயங்கினாலும் வேண்டாம் என சொல்ல தயங்காதீர்கள்
*உறவினர் அல்லது நண்பர் வீட்டில் சாப்பிட ஏதேனும் கொடுத்தால் உங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு மீதியை சாப்பிடும் முன் அவர்களிடமே கொடுத்து விடுங்கள்
*உணவகங்களில் வாடிக்கையாளர்களால் உன்ன முடியாத உணவுகளை பார்சல் செய்து அவர்கிளடமே கொடுக்கலாமே (தேவை பட்டால் )

   உணவை வீணாக்காமல் தேவை ஆனவர்களுக்கு கொடுப்போம் ............ வாழ்வோம் வாழவிடுவோம்

  

Thursday, September 13, 2012

மின்சாரம் இன்றி அமையாது உலகு !!!!!!!


  வணக்கம் நண்பர்களே!!!!! கூடங்குளம் இன்று மின்சாரத்திற்கு கூடா குளமாக உள்ளது. சரி நான் இங்கு அணுஉலைக்கு ஆதரவு தெரிவிக்கவோ,  இல்லை போராட்டத்திற்கு ஆதரவு தரவோ இல்லை இந்த பதிவு. ஏதோ என் சிறு அறிவுக்கு எட்டியது நான் இதை பத்தி விரிவாக பேச நான் விஞ்ஞானியோ , இல்லை என்னை சுற்றி விஞ்ஞானிகளோ இல்லை.. சரி விஷயத்துக்கு வருவோம் இனி ஒருபோதும் மின்சாரம் இன்றி அமையாது உலகம் இது உறுதி. அதை(மின்சாரத்தை) எப்படி உருவாக்குவது  எனபதில் தான் இப்போது சிக்கல்.
என்னால் முடிந்த சிறு யோசைனைகள்:
  * பெரும் கல்வி நிறுவனகள், பள்ளிகள், உணவு விடுதிகள் மற்றும்     மருத்துவமனைகளுக்கு எல்லாம் தாங்களாகவே சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு  உதவி செய்யலாம்    
* தெருவிளக்குகள் எல்லாம் சூரிய ஒளியில் இயங்க ஏற்பாடு செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் ஒளி உணரிகள் அமைத்து பகலில் வீணாகும் மின்சாரத்தை தவிர்க்கலாம்
*சி எப் எல்  எனபப்படும் கார்பன் ப்ளுரோ விளக்குகளுக்கு மானியங்கள் அளிக்கலாம்
*அரசு அலுவகங்களை முழுதும் மாற்று மின்சார முறைக்கு உட்படுத்தலாம்.

             மரங்களை வளர்க்க முயற்சி செய்வோம் நீர்நிலைகளை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம்

  எதோ எனக்கு தெரிந்த சிறு முறைகள் இதன்  மூலம் பெரும் மின்சார விரயத்தை தடுக்க முடியாது எனினும் முயற்சித்து  பார்க்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா.  
போராட்டங்கள் பலனுள்ளதாக இருந்தால் பெரும் ஆதரவு கிட்டும் அதை விடுத்து அர்த்தமற்ற  போராட்டங்களால் என்ன பயன் நான்  அணு ஆதரவாளர்கள் கிடையாது அனால் இன்றைய சூழலில் அதை விடுத்து வேறு வழி இல்லை.இதை போல் முயற்சிகள் மேற்கொள்ள அரசை தூண்டலாம்........
                                                
                           இனி ஒருபோதும் மின்சாரமின்றி  அமையாது உலகம் 




   
    

Sunday, August 12, 2012

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்?????????

   
          
என் இனிய இந்திய நண்பர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்......60+ ஆண்டுகள் ஆகின்றது நாம் அந்நிய கொடியை அகற்றி..... இத்தனை ஆண்டுகளில் மண்ணில் நுழைந்தோம் விண்ணில் பாய்ந்தோம் சந்தோசமே. என்னதான் விண்வெளியில் கால்பதித்தும் அணுவை பிளந்து சாதனை படைத்திருந்தாலும் நம் மண்ணின் மணத்தை மறந்தோம்..... விவசாயத்தை தான் சொல்கிறேன் எத்தனையோ சாதனை செய்தும் சோதனை செய்தும் வெற்றி பெரும் நாம் விவசாயத்தை முன்னெடுத்து செல்ல தயங்குவது ஏனோ....
  இத்தனை வருடமாகியும் இன்னும் சாதிய கொடுமையை ஒழிக்க முடியவில்லையே இன்னும் பல ஊர்களில் இரட்டை குவளை முறையும் சாதிய சுவர்களையும் ஓடைக்க முடியவில்லை.. இதனால் ஏற்படும் கொலைகளுக்கு கௌரவ கொலைகள் என்று அடையாளம் வேறு ......
     படிப்பும் சுகாதாரமும் அதுக்கு மேல இருக்கு கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரம் ஆக்கிவிட்டு குடியை அரசுடமை ஆக்கிவிட்டோம்........

அப்போ நாடு முன்னேறவே இல்லையா யார் சொன்னது அமெரிக்க போன்ற வல்லரசு என்று கூறிகொள்ளும் நாடுகள் சுமார் 100 ஆண்டுகளில் அடைந்த  வளர்ச்சியை நாம்  அரை நூற்றாண்டில் அடைந்தோம் இவ்வளவு வேற்றுமைகள் ஒளிந்திருந்தும் இன்னும் சிதறாமல் இருக்கிறோம் ஒற்றுமையே நம் வலிமை......வேற்றுமையில் ஒற்றுமை குறைகளை களைய பாடுபடுவோம் களைகளை அகற்றுவோம் முன்னேறுவோம் கம்பீரமாய்........

இனிய சுதந்திர நாள் நல் வாழ்த்துகள்  

 



   
  

Sunday, July 29, 2012

விளையாடுவோம் கொண்டாடுவோம் : :

விளையாடுவோம் கொண்டாடுவோம் : :
      தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா கூடவே தொடங்கிவிடும் நம் புலம்பலும் இந்தியாவின் பதக்க வேட்டையை பார்த்து.  நமது அண்டை நாடோ பதக்கத்தை அறுவடை செய்து கொண்டிருக்கும், நாமோ அவர்கள்  அறுவடை செய்யும்போது சிந்துவதையும் சிதறுவதையும் எடுத்துக்கொண்டு வருவோம். போட்டி முடிந்தவுடன் குழு அமைத்து குளிர்பானம் அருந்தி சில நாள் ஓட்டுவார்கள்..
      வீரர் வீராங்கனைகளை குறை கூறி என்ன பயன் அவர்களின் ஆடைகளைகூட இன்னும் நம்மால் தரமாய் தர இயலவில்லை. வில்வித்தையில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தீபிகா குமாரி நிலைமை யாவரும் அறிந்ததே வாழ்கை நடத்த வழியில்லாமல் வில்லை விற்ற கொடுமை, ஆனால் அதே ஊர்க்காரரான கிரிக்கெட் வீரரோ கோடியில் புரள்கிறார். நம் தேசிய விளையாட்டான ஹாக்கியோ இன்னும் மட்டமான நிலையில் உள்ளது ஹாக்கி பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு அழுகிய பழத்தில் பழச்சாறு.இப்படி இருக்க அவர்களுக்கு முழு விளையாட்டு விளையாட சத்து எங்க இருக்க போகுது.
   சரி அரசாங்கத்திடம் மட்டும் தான் தவறா இந்தியா பதக்கம் வாங்கல வாங்கல என ஆதங்க படும் பெற்றோர்களே ஏன் உங்கள் பிள்ளை ஒரு விளையாட்டு வீரனாகவோ வீராங்கனையாகவோ வர நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை அட போருக்கு அனுப்பாதீங்க விளையாட கூடவா. இன்றைய குழந்தைகள் கணினியுடன் விளையாடும் நேரமே அதிகம். வேண்டுமென்றால் பிற்காலத்தில் ஒலிம்பிக் போட்டி கணினிமயம் ஆனால் நாம் பதக்கம் வெல்ல வாய்ப்பு பிரகாசமோ..
                                       இனியேனும் வீரர்களை குறை கூறுவதைவிட அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று அரசாங்கம் சிந்திக்கட்டும் நம் பிள்ளைகளை விளையாட்டு வீரர் ஆவதை வளர்ப்போம்     .....

      விளையாட்டை வளர்ப்போம் விளையாட்டை போற்றுவோம்........ விளையாட்டை போற்றுதும் போற்றுதும்


Thursday, July 26, 2012

வருத்தம் தெரிவிப்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்

   கனத்த இதயத்துடன் இதை எழுதுகிறேன் நேற்று ஒரு பச்சிளம் குழந்தை பேருந்தில் இருந்த துளையில் விழுந்து அதே பேருந்தின் சக்கரத்தில் தன் உயிரை இழந்துள்ளது, பொதுமக்கள் ஆவேசத்துடன் பேருந்தை கொழுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்புவதுடன் அந்த நாளை கடந்து விடுவார்கள். ஆனால் நாழி இதே போல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதா.... தாளாளரின் பதில் எவ்வளவு அலட்சியம் உடையது பேருந்தை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிபடையில் விட்டு இருந்தோம் அதற்க்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்... அந்த பேயை அங்கேயே சங்கை நெரித்து கொன்றிருக்க வேண்டாம்.
  என்ன செய்தால் இவர்கள் திருந்துவார்கள் இது கட்டளை இல்ல அக்கறை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நிறுத்திவிட்டு வேற பள்ளிகளில் சேருங்கள்  ... அடுத்த வருடத்தில் இருந்து அந்த பள்ளியை புறக்கணியுங்கள் அரசாங்கத்தில் போராடி பள்ளியின் அங்கிகாரத்தை தடுக்க போராடுவோம்..........
        மன்னிச்சிக்கோ சுருதி என்னால் உனக்கு இரங்கல் தெரிவிப்பதை விட  உனக்காக எது செய்ய இயலவில்லை இந்த முதுகேளும்பட்ட்ற நாட்டிலும் மாநிலத்திலும் கிடைத்த சாபம் .......
உன் ஆன்மா சாந்தி அடையட்டும்


Tuesday, July 24, 2012

சேவையின் சோதனை


     பெட்ரோல் விலைக்கு நாடு முழுவதும் எழும் கண்டனத்தில் எள்ளளவு கூட எழாதது வேதனையே சேவை வரி விதிப்புக்கு. அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க மறந்துவிட்டனரா இல்லை மறைதுவிட்டனரா தெரியவில்லை... சேவை வரி என்ற பெயரில் நம்மை ஆளும் கொள்ளைகாரர்கள் பணம் பிடுங்க ஆரம்பித்தாயிற்று இதுக்கும் நம் பதில் மௌனமே. அட ஆமா 24 ருபாய் இருந்தாலே ஏழை இல்லை என்று சொன்னதற்கே நாம் ஒன்றும் கூறாமல் மௌன சாமியாராய் வாழ்கிறோம்... இனி நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 இல் இருந்து 100 ருபாய் வரை கூடும் மாத வரவு செலவு கணக்கில் 500 இல் இருந்து ஆயிரம் கூடும். இதை பின்னூட்டி அறியாதவர்களுக்கு தெருவியுங்கள்
சட்டை சுழற்ற்றும் நேரத்தில் சுழற்ற்ற மறக்காதீர்



Sunday, July 22, 2012

தண்ணீரில் கண்ணீர் !!!!!!!!!!!!!.........
      தண்ணீரில் எங்கள் கண்ணீர் கரைவதால் எங்கள் கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா......... நான் ஆற்றங்கரையில் வாழும் என் சொந்தங்களை பற்றி பதிவு செய்ய விரும்பி செய்யும் பதிவே இது.........  கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தின் வஞ்சிப்புக்கு பிறகு மீண்டும் கேரளத்தின் வஞ்சிப்புக்கு ஆளாக இருக்கிறோம்.... எங்கள் கண்ணீர் நீரோடு கரைவதால் புலப்படவில்லையோ இல்லை எங்கள் கண்ணீர் உங்களை ஒன்னும் செய்து விடாது என்ற துணிச்சலோ.... நம் முதல்வர் ஓய்வெடுக்க நேரம் தேடவும் முன்னாள் முதல்வருக்கு டெசோ கொசோ என்று எதோ நேரம் கடத்தவே சரியாக  இருக்கிறது  மீதம் உள்ளவர்களோ நாங்கள் பஞ்சுமெதையில் புரள்வதை போல் அடுத்தவர்களுக்காக நேரம் ஒதுக்கவே சரியாக உள்ளது;...... நாங்கள் யாரையும் குறை கூறவில்லை எங்கள் இயலாமையை எடுத்துரைக்கிறோம்... முல்லை பெரியாரை அபகரிக்கும் வேலையோடு சிறுவானியை அபகரிக்க திட்டம் தீட்டிஆயிற்று முலையில் கிள்ளி எரியவேண்டியதை வளர்த்து பின் அவதிப்படுவது நம் வாடிக்கை ஆகிவிட்டது... ஏற்கனவே கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதியை குப்பை கூலம் ஆக்கியாச்சு மணலை சுரண்டி பாலைவனம் ஆக்கியாச்சு அடுத்து தண்ணீரை சுரண்டி இடுகாடு ஆக்கவேண்டியது தான் பாக்கி... 
    சமுக வலைதளத்தை தாறுமாறாக உபயோகிக்கும் நம்மால் புரட்சி அல்ல இதை பற்றி புரிதலை உண்டாக்க கூட திராணி இல்லாமல் இருப்பது வேதனையே....... எங்களை காணுங்கள் எங்கள் வாழ்வு வளாமானால் தான் உங்களால் நிம்மதியாய் உணவை சுவைக்க இயலும்........ எண்களின் குரலோடு உங்களின் குரலை ஓங்கி எழுப்புங்கள் விவசாயியை துன்புருத்திவிட்டு நாம் வாழ்வது இயலாது........... நாம் சக்தியை உபயோகித்து ஏதோ சில தடுப்புகளை ஏற்படுத்துவோம்............

தண்ணீரில் எங்கள் கண்ணீரின் உவர்ப்பு சுவையோடு பருகாமல் எங்கள் வியர்வையின் இனிப்போடு பருக விடுங்கள் .............
வாழு வாழவிடு 
ஒருங்கிணைவோம் ஒற்றுமையை போற்றுவோம்     


பகுத்தறிவென்பது யாதெனில் ???????????
    நீண்ட நாளாய் எனக்குள்ளும்  மற்றவர்களிடமும் வினவும் வினா.......... ஆனால் சரியான விடையை கூற யாரும் இல்லை....... மீண்டும் பெரியாரே வந்தால் ஒழிய...... சரி நான் என்னோட பகுத்தறிவின் புரிதல்க்கு வருகிறேன்... என் கண்ணோட்டத்தில் பகுத்தறிவென்பது கடவுள் மறுப்பு என்பதில்லை மூட நம்பிக்கை எதிர்ப்பே என நான் நினைக்கிறேன்....    பலநேரங்களில் பெரும் படிப்பை படித்தவர்க்கு பகுத்தறிவு என்பது துளியும் இல்லை என்று நிருபித்துவிடுகின்றனர்... சமிபத்தில் ஒரு போலி துறவியின் மீது பல நிலைகளில் இருந்தும் புகார்மழை புகார் அளித்தவர்கள் தங்களை பெரும் அறிவாளிகளாக காட்டி கொள்கின்றனர்.... நான் நாட்டின் பெரிய பொறியியல் கல்லூரியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் படித்திருக்கிறேன் அப்போ நான் எவ்ளோ பெரிய அறிவாளி என்று மார்தட்டிவிட்டு அந்த போலி துறவி என்னை மூளை சலவை செய்து விட்டார் என்று புலம்பல். அவ்வளவு பெரிய அறிவாளி உங்கள் அறிவை ஒருவர் சலவை செய்யும் அளவுக்கு உங்கள் படிப்பறிவு இருக்கிறது....... இதில் தவறு யார் பக்கம் வெறும் புத்தக புழுக்களாக பகுத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் நம் கல்வியா....... கடவுளர்க்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நம் மக்களுக்கா..........    இல்லை மக்கள் பகுத்தறிந்தால் தங்கள் பிழைப்பை ஓட்ட முடியாது என்று கருதும் அரசியல்வாதிகளா......... இனியொரு விதி செய்வோம் புதிய விடியலை காண்போம் ................

Sunday, June 17, 2012

இனி அதிரடி

இனி வலை பதிவில் கொஞ்சம் சுறுசுறுப்பு காட்டுவதாய் முடிவு செய்துள்ளேன்......... என்னை பாதித்த நம் நாட்டுக்கு தேவையான விஷயங்களை விவாதிப்போம்........ தவறுகளை சுட்டிகாட்டிய நண்பர்களுக்கு நன்றி ..... தவறுகள் படிப்படியாக திருத்தப்படும்.... நன்றி
நல்லதை செய்வோம் நல்லதை நினைப்போம்   
யார் தவறு??????????
    பெரும்பாலான நேரத்தில் நம் தவற்றை மறைக்க மற்றவர்கள் மீது பழியை சுமத்துவது எளிதாகிவிடுகிறது......... அப்படியே நாம் மிக சுலபாமாக அரசியல்வாதிகள் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் போகிற போக்கில் நம் தவற்றை அவர்கள் மீது இறக்கிவிட்டு நடந்துவிடுகிறோம்.... லஞ்சம் ஊழல் பெருகிவிட்டது பணம் கொடுக்காமல் இங்கு எதுவும் நடக்காது என்று கூறி பணம் கொடுத்து நம் காரியத்தை சாதித்து விடுகிறோம். நாம் கொடுக்க ஆரம்பிப்பதால் தான் அவர்கள் வாங்க பழகினர்.... அரசியலை எடுத்தால் ஒன்று சாக்கடை என்று இயல்பாக கடந்துவிடுகிறோம் இல்லை யார் வந்தாலும் கொள்ளை தான் அடிக்க போறாங்கனு சொல்லிடுவோம்.... ஏன் மாற்று அரசியலை நம்மால் சிந்திக்க முடியவில்லை..........
   சென்ற வாரம் பள்ளிகரனையில் குப்பை கிடங்கு தீ பற்றி எரிந்தது அரசு எந்த நடவடிக்கை எடுக்கல என்பதை போன்று நின்றுவிட்டோம் ஆனால் அதில் நம் தவறை அப்பட்டமாக மறைத்து விட்டோம் இல்லை மறந்துவிட்டோம் (நமக்கு எது வசதியோ அது). நம்மில் எத்தனை பேர் மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும் பிரித்தளிகிறோம்(என்னையும் சேர்த்து) ஒரு குப்பய நம்மால் சரியாக கையாள முடியவில்லை...... இதிலும் நம் பங்கு உள்ளது
    சென்னையின் பெரும் துயரம் வாட்டி எடுக்கும் வெயில் கொடுமை இல்லை என்றால் பல பகுதிகளில்  மழை நேரங்களில் வெள்ளம் இதுவும் நாம் கண்மூடித்தனமாக மரங்களை அழிப்பதும் அழித்த மரங்களை வளர்த்தெடுக்க மறந்ததே...... கூவத்தில் படகு சவாரி செய்த பழைய புகைபடங்களை பார்க்கும் பொழுது நாம் வளர்கிறோம் என்பதை விட எவ்வளவு விரைவாக வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே தெரிகிறது............. நம் தவற்றை உணர்ந்து விரைவில் நல் பாதைக்கு   செல்ல முற்படுவோம்..... நான் என் தவறை மிக விரைவில் திருத்த முயற்சிகிறேன்..........
                                                                                                                                                                                                                                                            தொடர்ந்து சாடலாம் ............................................ 

Saturday, June 16, 2012

கல்வி எனும் ???????

கல்வி எனும் ???????
 என் நீண்ட நாளைய ஆதங்கம் இன்றைய பகிர்தலுக்காக கல்வி எனும் என்று ஆரம்பித்தால் பலரும் பலவற்றை சொல்வார்கள் கல்வி எனும் செல்வம் போல இன்னும் சொல்லி கொண்டே போகிறவர்கள் பலர் உள்ளனர் ..... அனால் இன்று வரை கல்வி என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமலே உள்ளேன் இதற்க்கு முக்கிய பொறுப்பு நம் கல்வி துறைக்கும் நம் பெற்றோருக்குமே........... கல்வி என் பார்வையில் என்ன என்று கூறவே இந்த பதிவு இந்த பதிவு உங்களில் சிலரது மனதை சிறிது உரசினாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் பெரிது........... பதினான்கு வருடம் பள்ளியில் கல்வி கற்றேன் இன்று வரை தெரியவில்லை எனக்கு எதற்கு அதனை பாடங்கள் என்று மொழி பாடம், வரலாறு, பூகோளம், இயற்பியல், வேதியல் எல்லாம் நமக்கு அவசியாமான பாடங்களே ஆனால் அனைத்தும் கற்று வரலாற்றில் ஒரு அரசன் எந்த ஆண்டு ஆன்றார் என்றோ உப்பின் வேதியல் குறிப்பீடு என்ன வென்றோ இயற்பியலின் சில பல விதிகளோ சற்றும் நினைவில்லை இப்படியான கல்வியை கட்டரு யாருக்கு பயன்.... இதை விட கொடுமை இந்த பதினான்கு வருட கல்வி என் உயர் படிப்புக்கான சிந்தனையை சற்றும் என் மனதில் விதிக்காதது மாபெரும் கொடுமை என் உயர்கல்விக்கு தொலைகாட்சி பெட்டியோ செய்தி நிகழ்ச்சியோ என் தந்தையின் நண்பர்களின் உதவி தேவை படுகிறது இன்றும் விலான்காதது எனக்கு என்ன தெரியும் என்னால் என்ன படிக்க முடியும் என்று அவர்கள் எப்படி அறிவர்........ படிப்புக்கு பின் வேலையாவது நாம் செரியாக தேர்வு செய்கிறோமா விரும்பி ஒரு பாடம் எடுத்தும் அதற்கான பணியை செய்ய முடியாமல் கணினியுடன் உரையாட சென்று விடுகிறோம்....... இயற்பியல்  படித்தவனுக்கு கணினி மொழிக்கும் சம்பந்தம் உண்டா என்று இன்றும் எனக்கு புதிரே.....இத்தனை ஓட்டமும் சமுகத்தின் அவலமே பாவம் பெற்றவர்கள் என்ன செய்வர் அவர்கள் பிள்ளை போட்டியில் முந்த வேண்டும் அதற்காக புத்தக பைக்குள் திணிக்க படும் பிள்ளைகள் ஆகிறோம்... இனி வரும் சமுகம் நல அறிவோடும் பண்போடும் திகழ நாட்டில் முழு முதல் புரட்சி கல்வி புரட்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து என் கருத்தே அன்றி இது கருத்து திணிப்பு அல்ல    


Saturday, April 28, 2012

இந்தியாவின் செயற்கைகோள்கள்:


   இந்தியா விண்ணை ஆள்வதில் பெருமை கொள்கிறோம்..பல வின்னூர்த்திகளும் செயற்கைக்கோள்கள் அனுப்புகிறோம். பல லட்சம் கோடிகள் செலவு செய்து விண்ணில் பாயவைக்கிறோம். அதற்க்கு நாம் சொல்வது நாட்டின் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி பசுமை புரட்சி... ஆனால் நாம் இதில் எதாவது ஒன்றிளேனும்  தன்னிறைவு அடைந்துள்ளோமா!! ஆம் என்று கூற நிச்சயம் யோசிப்போம்.... இத்தனை பணம் செலவு செய்து தீவிரவாதி ஊடுருவலை கண்டுபிடித்தோமா இல்லை அந்நிய நாட்டில் ஊடுருவும் வழியேனும் கண்டறிந்தோமா இல்லையே அமெரிக்காவோ இல்ல இங்கிலாந்தோ கூற வேண்டும் அப்புறம் எதுக்கு பாதுகாப்பு செயற்கைக்கோள்....
    கல்வி வளர்ச்சி கேட்கவே தேவை இல்லை நம் கல்வியின் தரத்தை கல்வியின் தரம் என்பதைவிட கற்பித்தலின்  தரம் இதனை செயற்கைகோள்களின் உதவியுடன் குறைந்தபட்சம் பெருநகரங்களில் உள்ள கல்வி நிலையங்களையாவது செயற்கைகோள்களுடன் இணைத்திருக்கலாம் இது நடந்திருந்தால் படிப்பது எவ்வளவு சுகமாக இருந்திருக்கும் அப்புறம் எதற்கு கல்விக்கான செயற்கைக்கோள்..........
    பசுமை புரட்சி.. புரட்சி என்ற வார்த்தையை எவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு தரம் குறைத்து நம்மால் மட்டுமே சித்தரிக்க முடியும்  விவசாய வளர்ச்சி என்றால் நிச்சயம் சிரிப்போம். சில வருடங்களுக்கு முன் பல போகம் அறுவடை செய்த நாம் இன்றோ பூசிகொல்லிகளின் பிடியில் நஞ்சுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம் இந்த பசுமை செயற்கைகோள்கள் குறைந்தபட்சம் தண்ணீரை கண்டுபிடித்து அதை நதிகலாக்கி அதை இணைக்கவாவது பயன் பட்டு இருந்தால் நிச்சயம் வரவேற்று இருக்கலாம் இந்த இடத்திலும் ஏமாற்றமே மிச்சம்....

   பிறகு எதுக்கு இதனை செயற்கைகோள்கள் விண்ணில் குப்பைகளை சேர்க்கவா இத்தனை கோடிகள். செயற்கைகோள்கள் மக்களுக்கு உதவினால் மட்டுமே அது விஞ்ஞான வளர்ச்சி இல்லை என்றால் அவை விஞ்ஞான குப்பிகலாகவே மிதக்கும்