Sunday, October 28, 2012

மெனுவும் உணவும் :

 மிக நீண்ட நாள் கழித்து என் வலைப்பூவை உயிர்பித்துள்ளேன். அனைவரும் நலமா
     சில நாட்களாக நான் அதிகமாக பார்ப்பதும் என் மனதை பிசைவதும் உணவு பொருளை வீணாக்குவது பெரும் பலம் கொண்ட அரசாங்கம் முதல் நடுத்தர மக்கள் வரை இதற்க்கு விதிவிலக்கல்ல. ஆள்பவர்கள் அசட்டையாக இருந்துவிடலாம் அவர்களின் மூன்று வேலை உணவிற்கு என்றும் உத்திரவாதம் உண்டு, சிறைபட்டாலும் கூட. ஆனால் உழைத்து பிழைக்கும் ஒவ்வொருவரும் மிக பெரிய தொழில் நிறுவனத்தின் செயல் அதிகாரியாய் இருந்தாலும் கூட பசியும் வறுமையும் கடக்காமல் அந்த இடத்திற்கு சென்று இருக்க முடியாது என்ற நம்பிக்கையில்...
          ஒரு வருடத்தில் மட்டும் பல ஆயிரம் டன் உணவுகள் ஆடம்பர  நட்சத்திர உணவு விடுதியில் மட்டும் வீணாகின்றன அப்படி என்றால் தினசரி மற்ற இடங்களில் வீணாக்கப்படும் உணவுகளை கணக்கெடுத்தால் அது பல நூறாண்டுகளுக்கு மக்களின் பஞ்சத்தை போக்க வல்லதாய் இருக்கும்..
   பசி ருசி அறியாது என்பார்கள் உங்களுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்றால் குப்பையில் கொட்டாமல் தேவைபடுவோர்க்கு தரலாமே. குப்பையில் கொட்டினாலும் கொட்டுவோம் மற்றவர்களுக்கு தர மாட்டோம் என்ற என்னத்தை தவிருங்கள்.
எதோ என்னால் முடிந்த சில யோசைனைகள் :
* விசேஷங்களில் தேவையான அளவு உணவை கேட்டு பெற்று கொள்ளுங்கள்
* வேண்டும் என்று சொல்வதற்கு தயங்கினாலும் வேண்டாம் என சொல்ல தயங்காதீர்கள்
*உறவினர் அல்லது நண்பர் வீட்டில் சாப்பிட ஏதேனும் கொடுத்தால் உங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு மீதியை சாப்பிடும் முன் அவர்களிடமே கொடுத்து விடுங்கள்
*உணவகங்களில் வாடிக்கையாளர்களால் உன்ன முடியாத உணவுகளை பார்சல் செய்து அவர்கிளடமே கொடுக்கலாமே (தேவை பட்டால் )

   உணவை வீணாக்காமல் தேவை ஆனவர்களுக்கு கொடுப்போம் ............ வாழ்வோம் வாழவிடுவோம்