Saturday, July 2, 2016

நான் ஏன் ஆண்மகன் ??

நீண்ட நெடும் நாட்களுக்கு பின் என் வலைப்பூ உயிர் பெற்றுள்ளது காரணம் ஒரு பெண் ..........

இதை எழுத காரணம் ஒரு பெண் காரணி இன்னொரு பெண் ..... இன்று காலையில் ஒரு வாட்சப் பதிவை காண நேர்ந்தது...அதில் பெண் எப்படி எல்லாம் இருக்கலாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் . எப்படி எல்லாம் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு என்று ஓர் நீண்ட நெடிய உபதேசம் .....

தோழர்களே அதை கண்டிப்பாக ஒரு ஆணின் அப்பட்டமான ஆணாதிக்க பதிவாகவே எனக்கு படுகிறது. கண்டிப்பாக அது பெண்ணுக்கான ஒரு எச்சரிக்கை மாற்று கருத்து இல்லை ஆனால் பெண் என்றால் அகதியா அவர்கள் இப்படி தான் நம் நாட்டில் காலம் ஓட்டவேண்டுமா நிச்சயமாய் நம் மண்ணில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும் வெட்க்கித்தலைக்குனிந்தே ஆகவேண்டும்....
இனி நாம் செய்ய வேண்டியது பெண்ணுக்கு பாடம் எடுப்பதை நிறுத்தவேண்டும் பாடம் கற்பிக்கவேண்டியது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்ற பாடமே அவசியம் ...
ஒரு கலாச்சாரம் நாம் உடுத்தும் உடையிலோ நாம் பேசும் மொழியிலோ மட்டும் உள்ளது என்றால் அதுவே நாம் இன்னும் கலாச்சாரம் அடையவில்லை என்று பொருள்... பெண்களுக்கான உரிமை எங்கு முழுமையாக உள்ளதோ ... எங்கு பெண் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறாளோ அங்கே கலாச்சராம் வளர்ந்துள்ளது....

ஒவ்வொரு பெற்றோருக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெண் வெளியில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று கூறுங்கள் தவறில்லை...ஆனால் வெளியில் செல்லும் உங்கள் மகன் பெண்ணிடம் எப்படி கண்ணியம் காக்க வேண்டும் என்று அழுத்தமாக கூற மறந்துவிடாதீர்கள்...

நான் ஏன் ஆண்மகன் ??

பெண்களை விட பலம் பொருந்தியவர்களாய் நாம் இருக்கிறோம் என்ற நம் நினைப்பு அவர்களை அடிமைப்படுத்த அல்ல அவர்களை அரவணைத்து நம் அரவணைப்பில் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் மாறாக நம் பலத்தை அவர்கள் மீது தவறாய் பயன்படுத்திவிட்டு தவறுக்கு அவர்களையே காரணி ஆக்கிவிடுகிறோம்....
முதலில் மனைவியை காதலியை கேலியாய் சித்தரிப்பதை நிறுத்துங்கள் .... ஏன் எனக்கு காதலியே இல்லை என்று ஏங்குவது கிடைப்பவர்களை கேலி பொருளாகவும் போகப்பொருளாக மாட்டுமே பயன்படுத்துவது... இதற்காகவா காதலியை தேடுகிறீர்கள் ..
எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் திரைப்பட பாடல்கள் பெண்களை கொச்சைப்படுத்தி விதைக்கிறோம். அதை பெண்களும் ஏற்று ஆமோதிப்பதே என் வியப்பினும் வியப்பு ....

நாம் ஏன் ஆண்மகனாய் இருக்கிறோம் என்பதற்கான விடை நம்மிடம் பெண்கள் எந்த அளவு பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதே .......

ஒவ்வொரு ஆணும் தன்னை கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம்

நான் ஏன் ஆண்மகன் ??

Saturday, April 4, 2015

சமூக வலை(ளை)தளம்

நீண்ட நாட்களாய் பதிவிட வேண்டும் என்று எண்ணி கொண்டே இருந்த பதிவு .........நேரமேலான்மையை ஒழுங்காக கையாளாததால் சற்றே மிகவும் தாமதமாகி விட்டது.......
சமுக வலைதள பதிவர்கள் ஆக போராளிகள் எனப்படும் சமூக வலைதள பதிவர்கள் நட்பில் இருக்கும் தோழமைகள்  மற்றும் என்னையும் சேர்த்தே ...... 

  எனக்கு தெரிந்த மற்றும் மற்றவர்களால் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் மிகவும் ஒருதலை பட்சமாகவும் இதனால் சமுகத்துக்கு ஏதும் சிறு நன்மை உள்ளதா என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இருக்கும் பின்தொடர்பு வட்டத்தை வைத்து பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதோ இயன்ற மாற்றத்தை நிறைவேற்றலாம்....

  சில நாட்களுக்கு முன் இந்தியாவின் மகள் என்ற குறும்படம் வெளிவந்தது .... நடிகைளின் படங்களை பகிரும் நாம் இந்தியாவின் மகளை பற்றி ஏதும் பகிரவில்லை அவள் தமிழகத்தின் மகள் இல்லையே என்பதாலோ ......

இந்தியாவின் அரசியல்வாதிகளை நய்யாண்டி செய்கிறோம் ......ஏதோதோ நகைச்சுவை துணுக்குகளாய் பதிவிடுகிறோம் ஒரு ஆயிரத்திற்கு மேல் பிடிதங்களை அள்ளி விடுகிறோம்
ஆனால் இதற்க்கேதேனும் தீர்வை அலசலாமே ஆராயலாமே ... நம்மிடையே உள்ள எதற்கும் பயன்படாத நோட்டா என்னும் அஸ்திரத்தை பலமாக்க பாடுபடலாமே ..........

உலகத்திற்கான அடுத்த அடுத்த மிகப்பெரும் அபாயம் நீரே ஆனால் அந்த நீருக்கான அடுத்த கட்ட முயற்சியாய் எந்த பதிவுகளும் இல்லை... மதுவிற்காக நாம் இடும் பதிவுகளில் சரி பாதி குடிநீருக்காக இட்டாலே எதோ சிறு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்  என் பதிவு என்ன செய்து விட போகிறது என்ற கேள்வியை முன் வைக்கலாம் ஆனால் சிறுதுளி பெரும் வெள்ளம் என்பதை அந்த நீரை போலவே மறந்து விட்டோம் போல.........
   நம் பதிவு அடுத்த கட்ட முன்னேற்றதிற்கு சிறிதேனும் பயன்பட்டால் சந்தோசமே .நகைச்சுவை இன்றி மனிதன் இல்லை ஒப்புகொள்கிறேன் ஆனால் வெறும் நகைச்சுவை துணுக்குகளை ஆதரிப்பவர்களை மட்டும் உங்கள் பின்தொடர்பாலர்களை ஆக்க வேண்டாம் ........

சிறிதேனும் நம்மை அலசுவோம் #letstakeselfie


Saturday, November 8, 2014

கோலா விளம்பரமும் மொபைல் டேட்டாவும்





நமக்கு கத்தி படத்தில் நடித்த விஜய் ஏன் கோலா விளம்பரத்தில் நடித்தார் ... மொபைல் டேட்டாவின் விலையேற்றம் சில பல அற்ப விஷயங்களில் போராட்டங்கள் (முகநூலில் மட்டும்) இதை தாண்டி போராட நம் முதுகெலும்பு ஒன்றும் அவ்வளவு வலுவானதாக இல்லை (என்னையும் சேர்த்தே)....
கொஞ்சம் பின்னோக்கி சென்றால் என்னை மிகவும் கவர்ந்த தேர்தலும் மிகவும் சிந்திக்க வைத்த தேர்தலும் இப்போ நடந்த தேர்தலே ... நிறைய இளைஞர்கள் நம்பிக்கையோடு வாக்களித்த மாதிரியே தெரிந்தாலும் புதியதோர்  விடியலை தேட இளைஞர்கள் முற்படவில்லை என்றே பட்டது
மிகவும் கவலை அளித்தது இளைஞர்களின் சாதி ரீதியான வாக்களிப்பு. இவர்களை நம்பி இப்படி ஒரு பதிவு நேரவிரயமே. எனினும் பேசிவிடுகிறேன்  
மொபைல் டேட்டா விலையேற்றத்தை கவனித்த நாம் அன்றாட தேவையான நீரையும் உணவையும் மறந்தே விட்டோம்... ஏன் நாம் நினைத்தால் ஒரு சில கிராமங்களை தத்தெடுத்து இயற்கை விவசாயத்தை செழிக்க வைக்கலாம் தண்ணீர்க்கான  வழித்தடங்களை காண முயற்சிக்கலாம். நாமும் பேச முயற்சிக்கிறோம் ஆனால் வெறும் முகநூல் பிடித்தங்களுக்கும் பின்னூட்டங்களுக்குமே இலக்காக இருக்கிறது.... நீர் மேலாண்மையும் இயற்கை விவசாயமும் நம் முக்கிய இலக்காய் இருந்தால் நலம்.
கண்டிப்பாக மாற்றம் விரும்பும் இளைஞர்களாய் இருந்தால் கொஞ்சம் முகநூலை தாண்டியும் எட்டி பார்க்கலாம் சினிமாவை களமாய் எடுத்து நம்முடனே மோதுவதை விட எதிரிகளை கண்டு வேரறுத்து களம் காண முற்படலாம் ........
புதியதோர் பாரதம் படைப்போம் ..... மாற்றம் ஒன்றே மாறாதது   

Wednesday, September 24, 2014

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

மங்கள்யான் ........ எதோ ஒரு பத்து மாதத்திற்கு முன் உருவான   கருவை பற்றி அப்போது பேச்சுக்கள் இருந்தது .....பத்தில் ஒன்றாக .....

இன்றோ நாட்டில் அனைவரையும் பெருமை படுத்தி வீறு நடை போட முக்கிய காரணியாய் மாறியது அந்த குழந்தை ....

  ஒரு தேவை இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு செலவா .... நாட்டில் உன்ன உணவு இல்லை இது போன்ற ஆடம்பர செலவு தேவையா ..... என்ன செய்ய போகுது மங்கள்யான் .... இது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் ...........

மங்கள்யான் என்ன செய்தது என்ன செய்ய போகிறது சத்தியமா எனக்கு அது பத்தி தெரியாது அந்த அளவுக்கு அறிவும் கெடையாது ........

எதோ எனக்கு எட்டிய வரையில் உலக வல்லரசுகள் என்று மார் தட்டும் நாடுகளும் சரி ........  ஆசிய வல்லரசு ஆக முயலும் நாடுகளும் சரி ...எட்டாத ஒன்றை நாம் அபாரமாக செய்துள்ளோம் நிச்சயம் தலை நிமிர்ந்து வீறு நடை போடும் நாளே இது சந்தேகமே இல்லை.......

இதனால் நாட்டுக்கு என்ன பயன் , ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கும் செலவை விட மிக குறைந்த விலையில் ஒரு விண்வெளி பயணம் ... யார் கண்டா பல நாடுகளுக்கு விண்வெளி பயன் சந்தையாய் மாற வாய்ப்புகளும் உண்டு...... ஏற்கனவே நாம் பல வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை நாம் செலுத் ஆரம்பித்தாயிற்று நீங்கள் சொன்ன இதனால் என் மக்களுக்கு என்ன பயன் கண்டிப்பாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கூட இருக்கலாம் .............

நல்லதே நடக்கும் .........

எது எப்படியோ யாரும் சாதிக்காததை நாம் செய்து விட்டோம் .....


மங்கள்யானின் இன்றைய செய்கையால் மக்களின் மனநிலை இன்று இதுவே

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். .........

வாழ்க பாரதம் ........


Sunday, August 24, 2014

ஆங்கில திரைப்படங்களின் மேன்மை

ஆங்கில திரைப்படங்களில் போல் தமிழ் படங்கள் இருப்பதில்லை அரைத்த மாவையே அரைகின்றனர் என்று நண்பர் ஒருவர் கூறும் போது நீண்ட யோசைனைக்கு உண்டானேன் ... அவர் கேட்ட இன்னொரு கேள்வி ஏன் தமிழ் படங்கள் ஆஸ்கார் விருது வாங்கும் தரத்தில் இல்லை ......

   ஆமாம் அவர் சொன்னது என்னமோ சரி தான் நம்மிடம் அவ்வளவு பொருளோ வியாபார சந்தையும் இல்லை... ஆனால் அவர் சொன்ன அரைத்த மாவு தான் இங்கே கேள்வி......

நான் பார்த்து எனக்கு தெரிந்த வரை ஆங்கில திரைபடத்தின் பிரம்மாண்ட வியாபார சந்தையினால் அவர்கள் அயல் நாட்டு வாசிகளிடம் சண்டைக்கு செல்கின்றனர் ..தேவை இல்லாமல் எதாவது ஒரு விலங்கை கிளப்பிவிட்டு அதை அடக்க இரண்டு மணி நேரம் வீணடிப்பார்கள்...... இல்லையேல் உளவு பார்க்க செல்வார்கள் ......... இதெல்லாம் இல்லாமல் மிசின்களை மோதவிடுவார்கள் ... கேட்டா எதோ physics, chemistry nu சொல்வாங்க ....... அடபாவிகளா அதெல்லாம் வந்து இருந்தா தான் அப்பவே படிச்சிருப்போமே படம் பாக்க போன எடத்துல ஏன்யா பாடம் எடுக்குறீங்க..........
   அந்த உலகத்தை காப்பதுற படத்துக்கு எங்க தமிழ் படங்கள் எவ்வளவோ தேவலாம்.. இரண்டு மணி நேரம் படத்தில் பெரும்பாலும் ஏதோ வாய் அசைப்பாங்க (ஆங்கில வசனங்கள் நமக்கு தான் புரியாதே ) கடைசி அரைமணி நேரம் எதோ பரபரப்பா பண்ணுவாங்க கடைசில படம் முடிஞ்சிடும் ......... ஆனா அவன் ஏன் அதை பண்ணான் ஏன் அது கூட போராடுனான்  சத்தியமா கடைசி வரைக்கும் புரியாது .....

  நம் மொழி படங்கள் போல் அதில் ஒன்ற முடியாது இங்கே நடிகன் வாங்கும் அடிக்கு கண்ணீர் சிந்துவான் ........ பாட்ஷா படத்தில் தலைவர் வாங்கும் அடிகளுக்கு அவர் எப்போ திருப்பி தருவார்னு ஏங்கிய ரசிகர்களை ஆங்கில திரைபடத்தில் காண முடியுமா ......... உணர்ச்சி உயிர் இதை கலந்து தருவதே எங்கள் மொழி திரைப்படங்கள் ....... ஆங்கில படங்கள் மேன்மை பொருந்தியே இருக்கலாம் ஆனால் எங்கள் திரைப்படங்கள் எங்களுக்காக எடுக்க படுபவை அதை நாங்க பாத்துக்குறோம் ... இனிமே தயவு செஞ்சி " we watch only hollywood movies" nu சொல்லாதீங்க பா .........

அப்புறம் அந்த ஆஸ்கார் அவார்ட் அது அமெரிக்க தேசிய விருது அதுக்காக நாம ஏன் படம் எடுக்கணும் .... நம் படங்களுக்கு அங்கீகாரம் தர அவர்கள் யார் .............
  மக்கள் மனதில் நிற்கும் படமே விருது பெரும் படம் .........

   

Saturday, October 19, 2013

தண்ணீர் தண்ணீர் :

   திரவ தங்கம் என்று பெட்ரோல் அழைக்க படுவது நமக்கே தெரியும் ஆனால் இன்னும் சில வருடங்களில் தண்ணீரே தங்கம் ஆகும் என்பதை நாம் நினைவில் கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்த தக்கதே...

   எதுவும் விலையின்றி கிடைத்தால் அதன் மதிப்பை உணர மறந்து விடுவோம் அதே தண்ணீர் மீதான நமது நிலையும். நம் முன்னே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிகொண்டே இருந்ததால் அதை நாம் நினைக்க மறந்து விட்டோம் ... அது பாயும் வழியில் நம்மை நிலைநாட்டினோம் அது சேரும் இடத்தில நம்மை நிறுத்தினோம் .....

   சில காலம் முன் குடிக்க மட்டுமே விலை குடுத்து வாங்க பட்ட நீர் இன்றோ அணைத்து அத்தியாவசிய தேவைக்கு விலை குடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மூன்றாம் உலக போரே தண்ணீருக்கு தான் என்ற நிலைமையில்.

  இன்னும் விழிக்க மறுக்கிறோம் என் முன் தண்ணீர் சிந்தி கொண்டு இருக்கும் போது அதை அடைக்க முற்படும் போது என்ன அக்கறை என்று ஏளனம் செய்பவர்கள்  ஏராளம் ஆனால் அது அக்கறை என்பதை விட பயமே என்று அடுத்தவர்கள் உணர தவறுகின்றனர் ...
  இனியேனும் நம் உடனடி தேவையான நீர் மேலாண்மை. அதையும் நம்மால் முழுவதும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாவது உருவாக்க முற்படுவோம் . தனியாக செய்ய இயலவில்லை என்றாலும் கூட்டாக முயற்சித்து மழை நீர் சேகரிப்பை கட்டமைப்போம்

நீரின்றி அமையாது உலகு...... புரிந்தால் அழகு

Sunday, September 8, 2013

சிந்திப்போம் உரிமையோடு மாற்றம் ஒன்றே மாறாதது

நீண்ட நெடுநாட்கள் கழித்து இந்த பக்கம் வந்துள்ளேன்..... நாடே கொந்தளிக்கும் ஒரு விஷயம் நம்ம அலசலனா எப்படி   ........

இந்திய ரூபாய் V டாலர்

 அது என்னமோ சென்செக்ஸ்னு சொல்றாங்க NSE BSE இதெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது ,,,,

எனக்கு தெரிஞ்சது நம்முடைய வலுவான ஆயுதம் அநியாயத்துக்கு அதை வீணாக்கும் ஒரே பிரஜைகள் இந்திய பிரஜைகள்  தான்.
வாக்கு என்னும் ஆயுதத்தை கம்ப்யூட்டர்க்கும்  டிவிக்கும் கோர்ட்டர்க்கும் விற்பனை செய்யும் நாம் அதை அலச தகுதி ஆனவர்களா என்பது கேள்விக்குறியே ......

ஒன்னு இதை எல்லாம் வாங்கிட்டு வாக்களிப்போம் இல்லைனா கிடைத்த ஒரு நாள் விடுமுறைல தூங்க சென்று விடுவோம்
   வாக்கு சீட்டின் அருமையை உணர்ந்தோர் என்று நினைக்கும்  சிலரும் இவங்க இல்லனா அவங்கன்னு இங்கி பின்கி பொங்கி போட்டு வாக்களிப்போம்

ஆனால் நம்மில் இருக்கும் இன்னொரு உரிமையை நாம் பெற முடியாமல் நம்மை எப்படி  அரசியல்வாதிகள் முகத்தில் கரியை பூசுகின்றனர் என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறோம் . ஏனென்றால் எனக்கு என் நாடு எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை பக்கத்துக்கு நாடு பக்கத்துக்கு நாடு என்றே  போராடுவோம் ..
  அதற்கு காட்டிய சிறிய அக்கறை நாட்டின் மீது  காட்டி நம் உரிமையை மீட்டிருந்தால் யார் கண்டா அந்த பக்கத்துக்கு நாடு பிரச்னையும்  தீர்ந்து இருக்கலாம்
"49 O" ... இதை வரவேற்போம் உரிமையை நிலை நாட்டுவோம்

அப்புறம் ருபாய் V டாலர்னு  எதோ ஆரம்பிசீங்கனு கேப்பவங்களுக்கு இத சரி பண்ணா அது சரி ஆகிடும் தெரியாததை ஏன் தேவை இல்லாம அலசிகிட்டு

மீண்டும் ச(சி)ந்திப்போம்   உரிமையோடு