Thursday, February 28, 2013

சிநேகிதியே


சில நாட்களாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அதிக வெளிச்சம் பாய்ச்சபடுகிறது இருந்தும் பத்தோடு பதினொன்றாக நாம் அதை எளிதில் கடந்து விடுகிறோம் இல்லையேல் மாங்கு மாங்கென்று சமூக வலைதளங்களில் மின்னல் வேக பதிவுகள் இட்டு பின்னூட்டங்களும் பலரின் விருப்பப்பதிவு ஆக்கிவிட்டு ஓய்ந்துவிடுகிறோம் நம் கைக்கு மற்றொரு அவல் கிடைத்துவிடுகிறது.
   அதுவும் தான் காதலித்த (காதல் என்று கொச்சை படுத்த படுகிற) பெண் தன்னை நிராகரித்தால் என்று அமிலம் வீசப்படுவது சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத வன்முறை. அந்த வன்முறைகளுக்கு அந்த மிருகங்கள் மன்னிக்கவும் மிருகங்கள் இவர்களை காட்டிலும் எவ்வளவோ தேவலை. அந்த கொடுமையாளர்கள் மட்டும் காரணமா நம் எல்லோரும் அதன் காரணிகளே.
   சற்று நம் உள்ளுணர்வை உசுப்பி விட்டு  பாருங்கள் நாம்  இன்னும் அமில கோப்பையை கையில்  ஏந்தவில்லை அவ்வளவே.அதை தவிர மற்ற முறையில் வன்முறைகள் ஏவிகொன்டே இருக்கிறோம் . விளம்பரங்கள், திரைப்படங்கள் , ஏன் திரைப்பட பாடல் முதற்கொண்டு. ஏன் அவ்வளவு நெடும்பயணம், நம் பதிவுகள் எல்லாம் பெண்களை இழிவுபடுத்தவே செய்கிறது. இதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இரண்டு நாட்கள் போர்க்கொடி பதிவுகள் பின்  மீண்டும் நம்  வன்முறை வெறியாட்டம் .
  அடுத்த பெண்களை குறை கூற எத்தனிக்கும் முன்பு நம் வீட்டில் உள்ள பெண்களை சிறிதேனும் நினைத்தால் இனியேனும் அப்படியான பதிவுகளை குறைக்கலாம்.
   அடுத்தவர்களின் வன்முறையை கண்டு செருப்பை ஓங்கும் நாம் நம்மை நோக்கி அதை ஒருமுறை காண்பித்து கொள்வது நமக்கான சுய பரிசோதனை ..........
        தயவு செய்து பெண்மையை போற்றாவிடிலும் இழிக்காதீர்கள்
அந்த கொடூரர்களுக்கு என்ன தண்டனை அமிலம் வீசினால் அவர்களையும் அமிலம் வீசியே கொல்ல வேண்டும் இதுவே அப்பெண்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.....

இதை நான் உண்மையான மகனாக உண்மையான காதலானாக ,உண்மையான அண்ணனாக, உண்மையான நண்பனாக பதிவிடுகிறேன்....

ஏற்றால் நலம் ... வாழ்க பெண்கள் வாழ்க தாய்மை