Saturday, October 19, 2013

தண்ணீர் தண்ணீர் :

   திரவ தங்கம் என்று பெட்ரோல் அழைக்க படுவது நமக்கே தெரியும் ஆனால் இன்னும் சில வருடங்களில் தண்ணீரே தங்கம் ஆகும் என்பதை நாம் நினைவில் கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்த தக்கதே...

   எதுவும் விலையின்றி கிடைத்தால் அதன் மதிப்பை உணர மறந்து விடுவோம் அதே தண்ணீர் மீதான நமது நிலையும். நம் முன்னே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிகொண்டே இருந்ததால் அதை நாம் நினைக்க மறந்து விட்டோம் ... அது பாயும் வழியில் நம்மை நிலைநாட்டினோம் அது சேரும் இடத்தில நம்மை நிறுத்தினோம் .....

   சில காலம் முன் குடிக்க மட்டுமே விலை குடுத்து வாங்க பட்ட நீர் இன்றோ அணைத்து அத்தியாவசிய தேவைக்கு விலை குடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மூன்றாம் உலக போரே தண்ணீருக்கு தான் என்ற நிலைமையில்.

  இன்னும் விழிக்க மறுக்கிறோம் என் முன் தண்ணீர் சிந்தி கொண்டு இருக்கும் போது அதை அடைக்க முற்படும் போது என்ன அக்கறை என்று ஏளனம் செய்பவர்கள்  ஏராளம் ஆனால் அது அக்கறை என்பதை விட பயமே என்று அடுத்தவர்கள் உணர தவறுகின்றனர் ...
  இனியேனும் நம் உடனடி தேவையான நீர் மேலாண்மை. அதையும் நம்மால் முழுவதும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாவது உருவாக்க முற்படுவோம் . தனியாக செய்ய இயலவில்லை என்றாலும் கூட்டாக முயற்சித்து மழை நீர் சேகரிப்பை கட்டமைப்போம்

நீரின்றி அமையாது உலகு...... புரிந்தால் அழகு

Sunday, September 8, 2013

சிந்திப்போம் உரிமையோடு மாற்றம் ஒன்றே மாறாதது

நீண்ட நெடுநாட்கள் கழித்து இந்த பக்கம் வந்துள்ளேன்..... நாடே கொந்தளிக்கும் ஒரு விஷயம் நம்ம அலசலனா எப்படி   ........

இந்திய ரூபாய் V டாலர்

 அது என்னமோ சென்செக்ஸ்னு சொல்றாங்க NSE BSE இதெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது ,,,,

எனக்கு தெரிஞ்சது நம்முடைய வலுவான ஆயுதம் அநியாயத்துக்கு அதை வீணாக்கும் ஒரே பிரஜைகள் இந்திய பிரஜைகள்  தான்.
வாக்கு என்னும் ஆயுதத்தை கம்ப்யூட்டர்க்கும்  டிவிக்கும் கோர்ட்டர்க்கும் விற்பனை செய்யும் நாம் அதை அலச தகுதி ஆனவர்களா என்பது கேள்விக்குறியே ......

ஒன்னு இதை எல்லாம் வாங்கிட்டு வாக்களிப்போம் இல்லைனா கிடைத்த ஒரு நாள் விடுமுறைல தூங்க சென்று விடுவோம்
   வாக்கு சீட்டின் அருமையை உணர்ந்தோர் என்று நினைக்கும்  சிலரும் இவங்க இல்லனா அவங்கன்னு இங்கி பின்கி பொங்கி போட்டு வாக்களிப்போம்

ஆனால் நம்மில் இருக்கும் இன்னொரு உரிமையை நாம் பெற முடியாமல் நம்மை எப்படி  அரசியல்வாதிகள் முகத்தில் கரியை பூசுகின்றனர் என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறோம் . ஏனென்றால் எனக்கு என் நாடு எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை பக்கத்துக்கு நாடு பக்கத்துக்கு நாடு என்றே  போராடுவோம் ..
  அதற்கு காட்டிய சிறிய அக்கறை நாட்டின் மீது  காட்டி நம் உரிமையை மீட்டிருந்தால் யார் கண்டா அந்த பக்கத்துக்கு நாடு பிரச்னையும்  தீர்ந்து இருக்கலாம்
"49 O" ... இதை வரவேற்போம் உரிமையை நிலை நாட்டுவோம்

அப்புறம் ருபாய் V டாலர்னு  எதோ ஆரம்பிசீங்கனு கேப்பவங்களுக்கு இத சரி பண்ணா அது சரி ஆகிடும் தெரியாததை ஏன் தேவை இல்லாம அலசிகிட்டு

மீண்டும் ச(சி)ந்திப்போம்   உரிமையோடு

Thursday, July 4, 2013

இனி ஒரு விதி செய்வோம் ............ இனி ஒரு விதி செய்வோம்

முகநூலின் இன்றைய விவாதம் இளவரசனும் திவ்யாவும் .......... அன்றைய நிகழ்வுகளை அன்றே அலசி தீர்வேதும் இன்றி அடுத்த நாளைக்கு  நகரும் தமிழக முகநூல் பயனாளியில் நானும் ஒருவன் .. அதனாலே இங்கு விவாதத்தில் அதிகம் பங்குபெறுவதில்லை... ஆன்மா சாந்தி அடையட்டும் என்ற பதிவோடு வேறு சண்டைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்திலே இருந்தேன் ...... இங்கே சில பதிவுகளும் சில பின்னூட்டங்களும் மிகவும் நோகடித்தது....
   இருவரும் மனமார காதலித்தே திருமணம் செய்திருப்பார்கள் , ஆனால் சமூக சூழ்ச்சியின் விதையும் சாதியம் அதன் அரசியலின் கொடூர வேரும் அந்த இளம் ஜோடியின் மேல் அழுத்தமாய் பதித்தால் அவர்களின் நிலை...  இதை சற்றும் உணரும் நிலையில் நாம் இல்லை . உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசனுக்கோ அந்த வேதனை அத்துடன் முடிந்தது ஆனால் அப்பெண்ணின் நிலை.
  சாதியின் கொடுமையை விட பெண் என்றவளை அடிமையாய் கையாளும்   கொடுமையே மிகவும் கொடியது ... கை கிழிய நாட்டு நடப்பை  தட்டச்சு செய்பவர்கள் கூட பெண்களை இன்னும் அடிமை நிலையிலே இருக்க வைக்க  விரும்புகிறார்கள் . ஒரு பெண்ணுக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து வடஇந்திய பதிவர்கள் கொதித்தனர் ஊடகம் அதிர்ந்தது நாமும் ஒத்து ஊதினோம் . இன்றோ நம் ஊரின் ஒரு மூலையில் நடந்த கொடுமைக்கு அப்பெண்ணையும் காதலையும் கொச்சைப்படுத்தி அதன்  மூலம் நம் பெண்ணடிமையின் வேரை அழகாய்  பரவ  விட எத்தனிக்கிறோம் .

  பெண்களை போகப்பொருளாய் பயன்படுத்தி தூக்கி எறிந்த எத்தனையோ தரம் கெட்ட ஆண்கள் உள்ளனர் அவர்களை தட்டி கேட்க திராணியற்று அங்கும் பெண்களை கொச்சைபடுத்தும் ஆண்  சமூகம் சாதிய தீயின்  அடித்தளமே ...... தீயின் அடித்தளத்தை அணைக்காமல் அதை ஊதி மறுப்பக்கம் தள்ளவே முயல்கிறோம் .

   காதலர்கள் தோற்க்கலாம்  காதல் தோற்ப்பதில்லை .........

மீண்டும் ஒரு அழகிய நல்வாழ்வு வாழ அந்த சகோதரியின் வாழ்க்கை மேம்பட வேண்டுவதை அன்றி ஏதும் செய்ய இயலாத சமூகத்தின் அங்கமான நானும் இதை பதிகிறேன்................

உன் கணவனின் ஆன்மா சாந்தி அடையட்டும் எங்கள்  ஆனதிக்கத்தோடும் சாதிய வன்கொடுமையோடும் .......

இனியும் சொல்லிவிடாதீர் நாம் சுதந்திர நாட்டில் உள்ளோம் என்று

இனி ஒரு விதி செய்வோம் ............ இனி ஒரு விதி செய்வோம்

Sunday, March 17, 2013

கலை களையும் ஒற்றுமை


வணக்கம்....
 சில நாட்களாக திரைப்படங்களும் அதனூடே வரும் மதச்சாயமும் என்னை கொஞ்சம் அச்சம் கொள்ளவே செய்கிறது. ஓரிரு மாதத்திற்கு முன் இதே போல் ஒரு திரைப்படம் மதச்சாயம் பூசப்பட்டு தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது நானும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரைபடத்திற்கு ஆதராவாய் குரல் கொடுத்ததில் நானும் ஒருவன். ஆனால் இன்று நடக்கும் நிலைமையை பார்த்தால் அன்று அந்த திரைப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால் இன்னும் கூட இங்கு இயக்குனர்கள் சிறிது கவனத்துடன் அதை கையாள கற்றுக்கொண்டு  இருந்து இருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது சமீபத்தில் வந்த திரைப்படம் ஒரு மதத்தினை மிக தரக்குறைவாக காட்டியதற்கு சற்று யோசித்திருப்பார்களோ...
   மதச்சாயம் போன்ற அரசியலுக்கு கலை அடிபணிந்து விடக்கூடாது என்றே எண்ணினேன் ஆனால் இன்றோ திரைப்படங்கள் பிரிவினையை தூண்டிடுமோ என்ற அச்சம் மேலோங்கி உள்ளது .
           உண்மைக்கு மிக அருகில் உங்கள் படம் இருக்கட்டும்  அதில் எந்த மாறுபாடும் இல்லை எங்கேயோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கும் நடக்கத்தான் செய்கிறது மறுக்கவில்லை. ஆனால், எல்லோரையும் கை நீட்டுவது பெரும்பான்மை அதிகாரம் கொண்டவர் என்ற மனப்பான்மையை அப்பட்டமாய் தெளிவுபடுத்துகிறது. எல்லா மதத்திலும் நன்மைகள் உண்டு தீமைகள் உண்டு உலகிற்கு அமைதியை கற்றுத்தந்த புத்த மதத்தில் தான் உலகின் மிக பெரும் அரக்கன் ஒளிந்திருந்தான் அதற்காக புத்தரை  தூற்ற முடியுமா .
இன்றோ குடும்பங்களுடன் திரைப்படங்களுக்கு செல்வது மிக அரிது நட்புகளுடன் செல்வதே அநேகமாய் உள்ளது அப்படி இருக்க என்னுடன் ஒரு இஸ்லாமிய தோழனோ இல்லை ஒரு கிறிஸ்துவ தோழனோ இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு மதத்தை கொச்சை படுத்து காட்சிகள் விரிந்த பிறகு எவரினாலும் அந்த திரைபடத்தை கலையாய் ரசிக்கமுடியும் என்று எண்ணுகிறீரா .
          என் படைப்பு என் உரிமை என்று கூறினாலும் உண்மை உங்கள் படைப்பு உங்கள் உரிமையே அதை பொது இடத்தில படைக்கும் பொது நாகரிகம் வேண்டாமா இது தான் உங்கள் கலை கற்று தந்ததா..

 இனியேனும் சற்று பொறுப்புடன் படைப்புகளை தர முயலுங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள் நாம் அதை பகைமையில் ஒற்றுமை ஆக்கிவிடாதீர்கள்

யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்தருளவும்
வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை

    

Thursday, March 7, 2013

அவளின்றி ஓரணுவும் அசையாது

அவனின்றி ஓரணுவும் அசையாது ஆனால் பெண்ணின்றி எதுவுமே இருந்திராது... என் வாழ்கையில் ஏன் எல்லோர் வாழ்கையிலும் நிச்சயம் ஒரு பெண்ணையும் கடக்காமல் நம் வாழ்வு கடந்திருக்காது. அவள் தாயின் வடிவமாகவோ இல்லை சகோதரி , தோழி காதலி என்று ஏதேனும் ஒரு வடிவம் பெற்று நம்முடன் பயணித்தே இருந்து இருக்கிறார்கள். நாம் உலகில் பல்வேறு பெண்களை சாதனை மங்கை என்று அடையாளப்படுத்தி இருக்கிறோம் ஆனால் எனக்கு ஒவ்வொரு பெண்ணும் சாதனை மங்கையே இந்த குரூர ஆணாதிக்க உலகத்தில் தன்னை மீட்டெடுக்க  போராடுபவர்கள்.
எனக்கான உலகத்தில் என்னை விடவும் என் தாய், தங்கை தோழிகளே என்றும் நிரம்பி உள்ளனர் . ஏதேனும் ஒரு தவறான வழியில் என் மனம் தடம் மாறலாம் என்று என்னும் போது  அவர்களே என் கண் முன்னே வந்து என்னை நல்வழிபடுத்தி இரட்சிக்கின்றனர்.
      ஏனோ நம்மில் பலர் நம் தாயை கொண்டாடும் அளவுக்கு தோழியையோ, தங்கையையோ , மனைவியையோ, காதலியையோ கொண்டாட மறுப்பதை போல மறந்து விடுகிறோம் ...
அதே போல் அவர்கள் நம்முள்  நமக்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம்......

இனியேனும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆணாதிக்க சிறையில் இருந்து விடுவித்து அவர்களின் சுய சிந்தனைக்கு வழி வகுத்தால் நிச்சயம் அந்த குடும்பம் மட்டும் அல்லாமல் சுற்றி இருப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் வைத்து .
இந்த மங்கையர் தினத்தில் இருந்தாவது அவர்களை மதிக்கவும் போற்றவும் செய்வோம்

என் வாழ்வில் பங்களித்த அணைத்து பெண்களுக்கும் பங்களிக்க போகும் பெண்ணுக்கும் பங்களிக்காத பெண்களுக்கும்
இனிய மங்கையர் தின நல வாழ்த்துகள்

Thursday, February 28, 2013

சிநேகிதியே


சில நாட்களாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அதிக வெளிச்சம் பாய்ச்சபடுகிறது இருந்தும் பத்தோடு பதினொன்றாக நாம் அதை எளிதில் கடந்து விடுகிறோம் இல்லையேல் மாங்கு மாங்கென்று சமூக வலைதளங்களில் மின்னல் வேக பதிவுகள் இட்டு பின்னூட்டங்களும் பலரின் விருப்பப்பதிவு ஆக்கிவிட்டு ஓய்ந்துவிடுகிறோம் நம் கைக்கு மற்றொரு அவல் கிடைத்துவிடுகிறது.
   அதுவும் தான் காதலித்த (காதல் என்று கொச்சை படுத்த படுகிற) பெண் தன்னை நிராகரித்தால் என்று அமிலம் வீசப்படுவது சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத வன்முறை. அந்த வன்முறைகளுக்கு அந்த மிருகங்கள் மன்னிக்கவும் மிருகங்கள் இவர்களை காட்டிலும் எவ்வளவோ தேவலை. அந்த கொடுமையாளர்கள் மட்டும் காரணமா நம் எல்லோரும் அதன் காரணிகளே.
   சற்று நம் உள்ளுணர்வை உசுப்பி விட்டு  பாருங்கள் நாம்  இன்னும் அமில கோப்பையை கையில்  ஏந்தவில்லை அவ்வளவே.அதை தவிர மற்ற முறையில் வன்முறைகள் ஏவிகொன்டே இருக்கிறோம் . விளம்பரங்கள், திரைப்படங்கள் , ஏன் திரைப்பட பாடல் முதற்கொண்டு. ஏன் அவ்வளவு நெடும்பயணம், நம் பதிவுகள் எல்லாம் பெண்களை இழிவுபடுத்தவே செய்கிறது. இதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இரண்டு நாட்கள் போர்க்கொடி பதிவுகள் பின்  மீண்டும் நம்  வன்முறை வெறியாட்டம் .
  அடுத்த பெண்களை குறை கூற எத்தனிக்கும் முன்பு நம் வீட்டில் உள்ள பெண்களை சிறிதேனும் நினைத்தால் இனியேனும் அப்படியான பதிவுகளை குறைக்கலாம்.
   அடுத்தவர்களின் வன்முறையை கண்டு செருப்பை ஓங்கும் நாம் நம்மை நோக்கி அதை ஒருமுறை காண்பித்து கொள்வது நமக்கான சுய பரிசோதனை ..........
        தயவு செய்து பெண்மையை போற்றாவிடிலும் இழிக்காதீர்கள்
அந்த கொடூரர்களுக்கு என்ன தண்டனை அமிலம் வீசினால் அவர்களையும் அமிலம் வீசியே கொல்ல வேண்டும் இதுவே அப்பெண்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.....

இதை நான் உண்மையான மகனாக உண்மையான காதலானாக ,உண்மையான அண்ணனாக, உண்மையான நண்பனாக பதிவிடுகிறேன்....

ஏற்றால் நலம் ... வாழ்க பெண்கள் வாழ்க தாய்மை  

Saturday, January 19, 2013

விவசாயம் போற்றுவோம்

இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் கிராமத்தின் முதுகெலும்பு விவசாயம் .நியாயப்படி பார்த்தால் உணவு பண்டங்கள் விற்கும் விலைக்கு ஒரு விவசாயியே நம் நாட்டின் பெரும் பணக்காரனாய் இருந்திருக்க வேண்டும். இங்கே நிலையோ தலைகீழ்
    மிகபெரும் பணக்காரராய் ஆவது இருக்கட்டும் தன வாழ்கையை  ஓட்டுவதற்காவது வழி வகுத்தால் நலம். விவசாயத்தை போற்றவேண்டிய அரசோ அவர்களை விரட்டி அந்த நிலத்தை அந்நிய முதலாளிகளுக்கு விற்பதில் குறியாய் உள்ளனர். வேறு எந்த நாட்டில்லாவது இப்படி ஒரு வளத்தை முட்டாள்தனமாய் இழந்திருபார்களா என்று தெரியவில்லை .
   ஒரு மாநில விவசாயிக்கு தண்ணீர் பெற்று தரமுடியாத வக்கற்ற அரசாங்கங்கள் . விளைநிலங்களை நஞ்சு கொட்டகையாகவும் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை இவர்களையே சாரும்.
      சரி அரசாங்கத்தை விட்டு நம்மை நோக்கி வருவோம் எத்தனை பேர் விவசாயத்தை ஆதரிக்க தயார் ஆதரிப்பு என்றால் நம்மை எறங்கி நாத்து நடவும் களை  பறிக்கவும் சொல்லவில்லை ஒரு விவசாயிக்கு தொழில்நுட்பத்தால் என்ன நன்மை நேர சேமிப்பு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் . தொழிநுட்பம் என்றவுடன் மரபணு மாற்று பயிர்கள் உயிர்கொல்லி உரங்களை தந்து விடுகின்றனர் இயற்கை விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி ஏதேனும் உதவலாம் தெரிந்தவர்கள் . தெரியாதவர்கள் விவசாயம் பற்றி சிறு பதிவேனும் பகிரலாம்

                                மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்