Sunday, March 17, 2013

கலை களையும் ஒற்றுமை


வணக்கம்....
 சில நாட்களாக திரைப்படங்களும் அதனூடே வரும் மதச்சாயமும் என்னை கொஞ்சம் அச்சம் கொள்ளவே செய்கிறது. ஓரிரு மாதத்திற்கு முன் இதே போல் ஒரு திரைப்படம் மதச்சாயம் பூசப்பட்டு தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது நானும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரைபடத்திற்கு ஆதராவாய் குரல் கொடுத்ததில் நானும் ஒருவன். ஆனால் இன்று நடக்கும் நிலைமையை பார்த்தால் அன்று அந்த திரைப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால் இன்னும் கூட இங்கு இயக்குனர்கள் சிறிது கவனத்துடன் அதை கையாள கற்றுக்கொண்டு  இருந்து இருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது சமீபத்தில் வந்த திரைப்படம் ஒரு மதத்தினை மிக தரக்குறைவாக காட்டியதற்கு சற்று யோசித்திருப்பார்களோ...
   மதச்சாயம் போன்ற அரசியலுக்கு கலை அடிபணிந்து விடக்கூடாது என்றே எண்ணினேன் ஆனால் இன்றோ திரைப்படங்கள் பிரிவினையை தூண்டிடுமோ என்ற அச்சம் மேலோங்கி உள்ளது .
           உண்மைக்கு மிக அருகில் உங்கள் படம் இருக்கட்டும்  அதில் எந்த மாறுபாடும் இல்லை எங்கேயோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கும் நடக்கத்தான் செய்கிறது மறுக்கவில்லை. ஆனால், எல்லோரையும் கை நீட்டுவது பெரும்பான்மை அதிகாரம் கொண்டவர் என்ற மனப்பான்மையை அப்பட்டமாய் தெளிவுபடுத்துகிறது. எல்லா மதத்திலும் நன்மைகள் உண்டு தீமைகள் உண்டு உலகிற்கு அமைதியை கற்றுத்தந்த புத்த மதத்தில் தான் உலகின் மிக பெரும் அரக்கன் ஒளிந்திருந்தான் அதற்காக புத்தரை  தூற்ற முடியுமா .
இன்றோ குடும்பங்களுடன் திரைப்படங்களுக்கு செல்வது மிக அரிது நட்புகளுடன் செல்வதே அநேகமாய் உள்ளது அப்படி இருக்க என்னுடன் ஒரு இஸ்லாமிய தோழனோ இல்லை ஒரு கிறிஸ்துவ தோழனோ இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு மதத்தை கொச்சை படுத்து காட்சிகள் விரிந்த பிறகு எவரினாலும் அந்த திரைபடத்தை கலையாய் ரசிக்கமுடியும் என்று எண்ணுகிறீரா .
          என் படைப்பு என் உரிமை என்று கூறினாலும் உண்மை உங்கள் படைப்பு உங்கள் உரிமையே அதை பொது இடத்தில படைக்கும் பொது நாகரிகம் வேண்டாமா இது தான் உங்கள் கலை கற்று தந்ததா..

 இனியேனும் சற்று பொறுப்புடன் படைப்புகளை தர முயலுங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள் நாம் அதை பகைமையில் ஒற்றுமை ஆக்கிவிடாதீர்கள்

யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்தருளவும்
வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை

    

Thursday, March 7, 2013

அவளின்றி ஓரணுவும் அசையாது

அவனின்றி ஓரணுவும் அசையாது ஆனால் பெண்ணின்றி எதுவுமே இருந்திராது... என் வாழ்கையில் ஏன் எல்லோர் வாழ்கையிலும் நிச்சயம் ஒரு பெண்ணையும் கடக்காமல் நம் வாழ்வு கடந்திருக்காது. அவள் தாயின் வடிவமாகவோ இல்லை சகோதரி , தோழி காதலி என்று ஏதேனும் ஒரு வடிவம் பெற்று நம்முடன் பயணித்தே இருந்து இருக்கிறார்கள். நாம் உலகில் பல்வேறு பெண்களை சாதனை மங்கை என்று அடையாளப்படுத்தி இருக்கிறோம் ஆனால் எனக்கு ஒவ்வொரு பெண்ணும் சாதனை மங்கையே இந்த குரூர ஆணாதிக்க உலகத்தில் தன்னை மீட்டெடுக்க  போராடுபவர்கள்.
எனக்கான உலகத்தில் என்னை விடவும் என் தாய், தங்கை தோழிகளே என்றும் நிரம்பி உள்ளனர் . ஏதேனும் ஒரு தவறான வழியில் என் மனம் தடம் மாறலாம் என்று என்னும் போது  அவர்களே என் கண் முன்னே வந்து என்னை நல்வழிபடுத்தி இரட்சிக்கின்றனர்.
      ஏனோ நம்மில் பலர் நம் தாயை கொண்டாடும் அளவுக்கு தோழியையோ, தங்கையையோ , மனைவியையோ, காதலியையோ கொண்டாட மறுப்பதை போல மறந்து விடுகிறோம் ...
அதே போல் அவர்கள் நம்முள்  நமக்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம்......

இனியேனும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆணாதிக்க சிறையில் இருந்து விடுவித்து அவர்களின் சுய சிந்தனைக்கு வழி வகுத்தால் நிச்சயம் அந்த குடும்பம் மட்டும் அல்லாமல் சுற்றி இருப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் வைத்து .
இந்த மங்கையர் தினத்தில் இருந்தாவது அவர்களை மதிக்கவும் போற்றவும் செய்வோம்

என் வாழ்வில் பங்களித்த அணைத்து பெண்களுக்கும் பங்களிக்க போகும் பெண்ணுக்கும் பங்களிக்காத பெண்களுக்கும்
இனிய மங்கையர் தின நல வாழ்த்துகள்