Thursday, July 4, 2013

இனி ஒரு விதி செய்வோம் ............ இனி ஒரு விதி செய்வோம்

முகநூலின் இன்றைய விவாதம் இளவரசனும் திவ்யாவும் .......... அன்றைய நிகழ்வுகளை அன்றே அலசி தீர்வேதும் இன்றி அடுத்த நாளைக்கு  நகரும் தமிழக முகநூல் பயனாளியில் நானும் ஒருவன் .. அதனாலே இங்கு விவாதத்தில் அதிகம் பங்குபெறுவதில்லை... ஆன்மா சாந்தி அடையட்டும் என்ற பதிவோடு வேறு சண்டைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்திலே இருந்தேன் ...... இங்கே சில பதிவுகளும் சில பின்னூட்டங்களும் மிகவும் நோகடித்தது....
   இருவரும் மனமார காதலித்தே திருமணம் செய்திருப்பார்கள் , ஆனால் சமூக சூழ்ச்சியின் விதையும் சாதியம் அதன் அரசியலின் கொடூர வேரும் அந்த இளம் ஜோடியின் மேல் அழுத்தமாய் பதித்தால் அவர்களின் நிலை...  இதை சற்றும் உணரும் நிலையில் நாம் இல்லை . உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசனுக்கோ அந்த வேதனை அத்துடன் முடிந்தது ஆனால் அப்பெண்ணின் நிலை.
  சாதியின் கொடுமையை விட பெண் என்றவளை அடிமையாய் கையாளும்   கொடுமையே மிகவும் கொடியது ... கை கிழிய நாட்டு நடப்பை  தட்டச்சு செய்பவர்கள் கூட பெண்களை இன்னும் அடிமை நிலையிலே இருக்க வைக்க  விரும்புகிறார்கள் . ஒரு பெண்ணுக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து வடஇந்திய பதிவர்கள் கொதித்தனர் ஊடகம் அதிர்ந்தது நாமும் ஒத்து ஊதினோம் . இன்றோ நம் ஊரின் ஒரு மூலையில் நடந்த கொடுமைக்கு அப்பெண்ணையும் காதலையும் கொச்சைப்படுத்தி அதன்  மூலம் நம் பெண்ணடிமையின் வேரை அழகாய்  பரவ  விட எத்தனிக்கிறோம் .

  பெண்களை போகப்பொருளாய் பயன்படுத்தி தூக்கி எறிந்த எத்தனையோ தரம் கெட்ட ஆண்கள் உள்ளனர் அவர்களை தட்டி கேட்க திராணியற்று அங்கும் பெண்களை கொச்சைபடுத்தும் ஆண்  சமூகம் சாதிய தீயின்  அடித்தளமே ...... தீயின் அடித்தளத்தை அணைக்காமல் அதை ஊதி மறுப்பக்கம் தள்ளவே முயல்கிறோம் .

   காதலர்கள் தோற்க்கலாம்  காதல் தோற்ப்பதில்லை .........

மீண்டும் ஒரு அழகிய நல்வாழ்வு வாழ அந்த சகோதரியின் வாழ்க்கை மேம்பட வேண்டுவதை அன்றி ஏதும் செய்ய இயலாத சமூகத்தின் அங்கமான நானும் இதை பதிகிறேன்................

உன் கணவனின் ஆன்மா சாந்தி அடையட்டும் எங்கள்  ஆனதிக்கத்தோடும் சாதிய வன்கொடுமையோடும் .......

இனியும் சொல்லிவிடாதீர் நாம் சுதந்திர நாட்டில் உள்ளோம் என்று

இனி ஒரு விதி செய்வோம் ............ இனி ஒரு விதி செய்வோம்