Thursday, September 13, 2012

மின்சாரம் இன்றி அமையாது உலகு !!!!!!!


  வணக்கம் நண்பர்களே!!!!! கூடங்குளம் இன்று மின்சாரத்திற்கு கூடா குளமாக உள்ளது. சரி நான் இங்கு அணுஉலைக்கு ஆதரவு தெரிவிக்கவோ,  இல்லை போராட்டத்திற்கு ஆதரவு தரவோ இல்லை இந்த பதிவு. ஏதோ என் சிறு அறிவுக்கு எட்டியது நான் இதை பத்தி விரிவாக பேச நான் விஞ்ஞானியோ , இல்லை என்னை சுற்றி விஞ்ஞானிகளோ இல்லை.. சரி விஷயத்துக்கு வருவோம் இனி ஒருபோதும் மின்சாரம் இன்றி அமையாது உலகம் இது உறுதி. அதை(மின்சாரத்தை) எப்படி உருவாக்குவது  எனபதில் தான் இப்போது சிக்கல்.
என்னால் முடிந்த சிறு யோசைனைகள்:
  * பெரும் கல்வி நிறுவனகள், பள்ளிகள், உணவு விடுதிகள் மற்றும்     மருத்துவமனைகளுக்கு எல்லாம் தாங்களாகவே சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க அரசு  உதவி செய்யலாம்    
* தெருவிளக்குகள் எல்லாம் சூரிய ஒளியில் இயங்க ஏற்பாடு செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் ஒளி உணரிகள் அமைத்து பகலில் வீணாகும் மின்சாரத்தை தவிர்க்கலாம்
*சி எப் எல்  எனபப்படும் கார்பன் ப்ளுரோ விளக்குகளுக்கு மானியங்கள் அளிக்கலாம்
*அரசு அலுவகங்களை முழுதும் மாற்று மின்சார முறைக்கு உட்படுத்தலாம்.

             மரங்களை வளர்க்க முயற்சி செய்வோம் நீர்நிலைகளை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம்

  எதோ எனக்கு தெரிந்த சிறு முறைகள் இதன்  மூலம் பெரும் மின்சார விரயத்தை தடுக்க முடியாது எனினும் முயற்சித்து  பார்க்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா.  
போராட்டங்கள் பலனுள்ளதாக இருந்தால் பெரும் ஆதரவு கிட்டும் அதை விடுத்து அர்த்தமற்ற  போராட்டங்களால் என்ன பயன் நான்  அணு ஆதரவாளர்கள் கிடையாது அனால் இன்றைய சூழலில் அதை விடுத்து வேறு வழி இல்லை.இதை போல் முயற்சிகள் மேற்கொள்ள அரசை தூண்டலாம்........
                                                
                           இனி ஒருபோதும் மின்சாரமின்றி  அமையாது உலகம் 




   
    

4 comments:

  1. மின்சாரமின்றி அமையாது உலகம் / unmai :)

    You've a visionary thought! nice

    ReplyDelete
  2. நேர்மையான பதிவு..... நீங்க சொல்லிருக்க திட்டங்கள் எல்லாமே அரசு நினைத்தால் செயல்பாட்டுக்கு வரவைக்கலாம்.....

    ஆனா.....

    மாநிலத்துல அம்மா மௌனவிரதத்துல இருக்காங்க.....
    அய்யா அடுத்த படத்துக்கு வசனம் எழுதுறதுல பிஸி.......

    மத்தில....
    நிலக்கரி சுரங்கத்துக்குள்ள போய்ட்டு வெளிலவர வழி தெரியாம தவிக்கிற பிரதமர்....
    டெல்லில இருக்குற பிரதமருக்கு டெல்லில இருந்துக்கிட்டே கடிதம் எழுதுறதுல பிஸியா இருக்கிற அன்னை....

    ஜனாதிபதி...... #இப்ப ரொம்ப முக்கியம்....

    பேசாம உதயகுமாருக்கு ஆதரவா எழுதுங்க பாஸ்.... எதாச்சும் வருமானம் கிடைக்கும்....

    ReplyDelete
    Replies
    1. HA hA... avarukku aatharavalikka neriay per irukaanga unmaiya erka thaan marukkuraanga

      Delete