Thursday, March 7, 2013

அவளின்றி ஓரணுவும் அசையாது

அவனின்றி ஓரணுவும் அசையாது ஆனால் பெண்ணின்றி எதுவுமே இருந்திராது... என் வாழ்கையில் ஏன் எல்லோர் வாழ்கையிலும் நிச்சயம் ஒரு பெண்ணையும் கடக்காமல் நம் வாழ்வு கடந்திருக்காது. அவள் தாயின் வடிவமாகவோ இல்லை சகோதரி , தோழி காதலி என்று ஏதேனும் ஒரு வடிவம் பெற்று நம்முடன் பயணித்தே இருந்து இருக்கிறார்கள். நாம் உலகில் பல்வேறு பெண்களை சாதனை மங்கை என்று அடையாளப்படுத்தி இருக்கிறோம் ஆனால் எனக்கு ஒவ்வொரு பெண்ணும் சாதனை மங்கையே இந்த குரூர ஆணாதிக்க உலகத்தில் தன்னை மீட்டெடுக்க  போராடுபவர்கள்.
எனக்கான உலகத்தில் என்னை விடவும் என் தாய், தங்கை தோழிகளே என்றும் நிரம்பி உள்ளனர் . ஏதேனும் ஒரு தவறான வழியில் என் மனம் தடம் மாறலாம் என்று என்னும் போது  அவர்களே என் கண் முன்னே வந்து என்னை நல்வழிபடுத்தி இரட்சிக்கின்றனர்.
      ஏனோ நம்மில் பலர் நம் தாயை கொண்டாடும் அளவுக்கு தோழியையோ, தங்கையையோ , மனைவியையோ, காதலியையோ கொண்டாட மறுப்பதை போல மறந்து விடுகிறோம் ...
அதே போல் அவர்கள் நம்முள்  நமக்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம்......

இனியேனும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆணாதிக்க சிறையில் இருந்து விடுவித்து அவர்களின் சுய சிந்தனைக்கு வழி வகுத்தால் நிச்சயம் அந்த குடும்பம் மட்டும் அல்லாமல் சுற்றி இருப்போருக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் வைத்து .
இந்த மங்கையர் தினத்தில் இருந்தாவது அவர்களை மதிக்கவும் போற்றவும் செய்வோம்

என் வாழ்வில் பங்களித்த அணைத்து பெண்களுக்கும் பங்களிக்க போகும் பெண்ணுக்கும் பங்களிக்காத பெண்களுக்கும்
இனிய மங்கையர் தின நல வாழ்த்துகள்

No comments:

Post a Comment