Sunday, September 8, 2013

சிந்திப்போம் உரிமையோடு மாற்றம் ஒன்றே மாறாதது

நீண்ட நெடுநாட்கள் கழித்து இந்த பக்கம் வந்துள்ளேன்..... நாடே கொந்தளிக்கும் ஒரு விஷயம் நம்ம அலசலனா எப்படி   ........

இந்திய ரூபாய் V டாலர்

 அது என்னமோ சென்செக்ஸ்னு சொல்றாங்க NSE BSE இதெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது ,,,,

எனக்கு தெரிஞ்சது நம்முடைய வலுவான ஆயுதம் அநியாயத்துக்கு அதை வீணாக்கும் ஒரே பிரஜைகள் இந்திய பிரஜைகள்  தான்.
வாக்கு என்னும் ஆயுதத்தை கம்ப்யூட்டர்க்கும்  டிவிக்கும் கோர்ட்டர்க்கும் விற்பனை செய்யும் நாம் அதை அலச தகுதி ஆனவர்களா என்பது கேள்விக்குறியே ......

ஒன்னு இதை எல்லாம் வாங்கிட்டு வாக்களிப்போம் இல்லைனா கிடைத்த ஒரு நாள் விடுமுறைல தூங்க சென்று விடுவோம்
   வாக்கு சீட்டின் அருமையை உணர்ந்தோர் என்று நினைக்கும்  சிலரும் இவங்க இல்லனா அவங்கன்னு இங்கி பின்கி பொங்கி போட்டு வாக்களிப்போம்

ஆனால் நம்மில் இருக்கும் இன்னொரு உரிமையை நாம் பெற முடியாமல் நம்மை எப்படி  அரசியல்வாதிகள் முகத்தில் கரியை பூசுகின்றனர் என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறோம் . ஏனென்றால் எனக்கு என் நாடு எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை பக்கத்துக்கு நாடு பக்கத்துக்கு நாடு என்றே  போராடுவோம் ..
  அதற்கு காட்டிய சிறிய அக்கறை நாட்டின் மீது  காட்டி நம் உரிமையை மீட்டிருந்தால் யார் கண்டா அந்த பக்கத்துக்கு நாடு பிரச்னையும்  தீர்ந்து இருக்கலாம்
"49 O" ... இதை வரவேற்போம் உரிமையை நிலை நாட்டுவோம்

அப்புறம் ருபாய் V டாலர்னு  எதோ ஆரம்பிசீங்கனு கேப்பவங்களுக்கு இத சரி பண்ணா அது சரி ஆகிடும் தெரியாததை ஏன் தேவை இல்லாம அலசிகிட்டு

மீண்டும் ச(சி)ந்திப்போம்   உரிமையோடு

1 comment:

  1. வாக்கு என்னும் ஆயுதத்தை கம்ப்யூட்டர்க்கும் டிவிக்கும் கோர்ட்டர்க்கும் விற்பனை செய்யும் நாம் அதை அலச தகுதி ஆனவர்களா என்பது கேள்விக்குறியே /// நிச்சயமா யோசிக்க வேண்டிய விஷயம்....

    தேவையான பதிவு..... தொடருங்கள்....

    ReplyDelete