Saturday, July 2, 2016

நான் ஏன் ஆண்மகன் ??

நீண்ட நெடும் நாட்களுக்கு பின் என் வலைப்பூ உயிர் பெற்றுள்ளது காரணம் ஒரு பெண் ..........

இதை எழுத காரணம் ஒரு பெண் காரணி இன்னொரு பெண் ..... இன்று காலையில் ஒரு வாட்சப் பதிவை காண நேர்ந்தது...அதில் பெண் எப்படி எல்லாம் இருக்கலாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் . எப்படி எல்லாம் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு என்று ஓர் நீண்ட நெடிய உபதேசம் .....

தோழர்களே அதை கண்டிப்பாக ஒரு ஆணின் அப்பட்டமான ஆணாதிக்க பதிவாகவே எனக்கு படுகிறது. கண்டிப்பாக அது பெண்ணுக்கான ஒரு எச்சரிக்கை மாற்று கருத்து இல்லை ஆனால் பெண் என்றால் அகதியா அவர்கள் இப்படி தான் நம் நாட்டில் காலம் ஓட்டவேண்டுமா நிச்சயமாய் நம் மண்ணில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும் வெட்க்கித்தலைக்குனிந்தே ஆகவேண்டும்....
இனி நாம் செய்ய வேண்டியது பெண்ணுக்கு பாடம் எடுப்பதை நிறுத்தவேண்டும் பாடம் கற்பிக்கவேண்டியது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்ற பாடமே அவசியம் ...
ஒரு கலாச்சாரம் நாம் உடுத்தும் உடையிலோ நாம் பேசும் மொழியிலோ மட்டும் உள்ளது என்றால் அதுவே நாம் இன்னும் கலாச்சாரம் அடையவில்லை என்று பொருள்... பெண்களுக்கான உரிமை எங்கு முழுமையாக உள்ளதோ ... எங்கு பெண் எந்த பயமும் இல்லாமல் இருக்கிறாளோ அங்கே கலாச்சராம் வளர்ந்துள்ளது....

ஒவ்வொரு பெற்றோருக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெண் வெளியில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று கூறுங்கள் தவறில்லை...ஆனால் வெளியில் செல்லும் உங்கள் மகன் பெண்ணிடம் எப்படி கண்ணியம் காக்க வேண்டும் என்று அழுத்தமாக கூற மறந்துவிடாதீர்கள்...

நான் ஏன் ஆண்மகன் ??

பெண்களை விட பலம் பொருந்தியவர்களாய் நாம் இருக்கிறோம் என்ற நம் நினைப்பு அவர்களை அடிமைப்படுத்த அல்ல அவர்களை அரவணைத்து நம் அரவணைப்பில் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் மாறாக நம் பலத்தை அவர்கள் மீது தவறாய் பயன்படுத்திவிட்டு தவறுக்கு அவர்களையே காரணி ஆக்கிவிடுகிறோம்....
முதலில் மனைவியை காதலியை கேலியாய் சித்தரிப்பதை நிறுத்துங்கள் .... ஏன் எனக்கு காதலியே இல்லை என்று ஏங்குவது கிடைப்பவர்களை கேலி பொருளாகவும் போகப்பொருளாக மாட்டுமே பயன்படுத்துவது... இதற்காகவா காதலியை தேடுகிறீர்கள் ..
எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் திரைப்பட பாடல்கள் பெண்களை கொச்சைப்படுத்தி விதைக்கிறோம். அதை பெண்களும் ஏற்று ஆமோதிப்பதே என் வியப்பினும் வியப்பு ....

நாம் ஏன் ஆண்மகனாய் இருக்கிறோம் என்பதற்கான விடை நம்மிடம் பெண்கள் எந்த அளவு பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதே .......

ஒவ்வொரு ஆணும் தன்னை கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம்

நான் ஏன் ஆண்மகன் ??

No comments:

Post a Comment